நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டு இருந்த மாணவர் நீரில் மூழ்கி பலி!

வென்னப்புவ – பொரலஸ்ஸ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பன்னல மற்றும் மகந்துர பிரதேசத்தைச் சேர்ந்த 80 மாணவர்கள் சுற்றுலா சென்றிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தலங்காவ பிரதேசத்தில் வசித்து வந்த 14 வயதுடைய 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவியின் சடலம் ஹலவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் கிராம சேவகர் என கூறி வயோதிப பெண்ணிடம் சங்கிலியை பறித்து சென்ற சந்தேக நபர்!
Next articleஇலங்கையில் ரேசர் (அழிப்பான்) ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரிப்பு!