20 வயதுடைய இளைஞன் காணாமல் போயுள்ளதாக அவரின் தாயார் பொலிஸில் புகார்!

மாவனெல்ல, ஹிகுல பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனைத் தேடும் பணியில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாக அவரது தாயார் மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஐந்தடி ஏழு அங்குல உயரமான அராச்சியைச் சேர்ந்த விதுஷிகா நவஞ்சன பண்டாரா என்பவர் காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞன் கடந்த ஜூன் மாதம் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் தோற்றிய பின்னர் புத்தளம் ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள மடம் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தனது பெற்றோரைப் பார்ப்பதற்காக வீடு திரும்பிய அவர், விகாரை சந்திக்கச் சென்றபோது காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறுதியாக குறித்த இளைஞன் தனது சகோதரியை தொடர்பு கொண்டு தான் கேகலையில் இருப்பதாகவும் அதன் பின்னர் இந்த இளைஞன் தொடர்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

காணாமல் போன இளைஞன் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous articleஅவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபாக உயிரிழந்த இலங்கை இளைஞன்!
Next articleயாழில் விபரீத முடிவால் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு !