யாழில் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது சரமாரி வாள்வெட்டு! வெளியான காரணம் !

யாழ்ப்பாணம் புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த வாள் வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் கடையின் உரிமையாளர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு மின்வெட்டு அமுலில் இருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு கும்பல் இரண்டு பேர் வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த 35 வயதுடைய வர்த்தகர் ஒருவர் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் அண்மைய நாட்களில் வாள் வெட்டுச் சம்பவங்கள் அதிகம் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கும் மக்கள், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொறுப்பானவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous articleயாழில் சைவ உணவகத்தில் வாங்கிய வடையில் கரப்பான் பூச்சி!
Next articleயாழில் சட்ட வைத்திய அதிகாரியை ரோட்டில் வைத்த தாக்க முயன்ற 10 பேர் கைது !