பொருளாதார நெருக்கடியால் இளம் தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை !

பிள்ளையின் தந்தை வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஹோமாகம வடக்கு பிட்டிபன, ஹெட்டிகொட பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தோமஸ் திசாநாயக்க கலன மதுசங்க என்ற 28 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தந்தை கடுமையான பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டார்.

கூலித் தொழிலாளியாகச் சம்பாதித்து வரும் இவர், கடந்த சில நாட்களாக வேலையின்றி மன உளைச்சலில் இருந்ததாகவும், அடிக்கடி தற்கொலை செய்து கொள்ள நினைப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இரண்டு வயது மகளின் தந்தையான இவர், தனது குடும்பம் வாழ சரியான வழி இல்லாத காரணத்தினால் 15 தடவைகளுக்கு மேல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleபொலிஸாருக்கு பயந்து ஆற்றில் குதித்து தப்பிக்க முயற்சித்த நால்வரில் ஒருவர் மாயம் !
Next article17 வருட பிரிவு; வெளிநாட்டிலிருந்து வந்த மனைவி கொலை ; கணவன் தற்கொலை!