அனைத்து பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை ! வெளியான விஷேட அறிவிப்பு !

பாடசாலை விடுமுறைகள் தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை (9) விடுமுறை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வளிமண்டல நிலைமைகளை கருத்திற் கொண்டு நாளை (09) பாடசாலையை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு தீர்மானம் எடுக்குமாறு இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleவானிலை மாற்றம் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை !
Next articleநயினாதீவு – குறிகாட்டுவான் படகுச்செசேவை நிறுத்தம் ! வெளியான காரணம் !