வவுனியாவை சேர்ந்த நபர் பரிதாபமாக கொழும்பில் உயிரிழப்பு ! வெளியான காரணம் !

நேற்று (08.12.2022) பணியிடத்தில் பணிபுரியும் போது ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அவர் வவுனியாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

வவுனியா குட்செட் தெருவில் வசிக்கும் 41 வயதுடைய கனகசபை ரஜித் நிலோசன் என்பவர் கொழும்பில் தங்கியிருந்து இலத்திரனியல் வர்த்தகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleமின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
Next articleதீவிரமடையும் சூறாவளியால் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!