யாழில் வீட்டின் மீது விழுந்த பனைமரம் !

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை – கரம்பன் பகுதியில் வீட்டினருகே நின்றிருந்த பனைமரம் முறிந்து வீடொன்றின் மீது வீழ்ந்ததில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

“மந்தாஸ்” புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் மிதமான மழையும் அவ்வப்போது பலத்த காற்றும் வீசும்.

இந்நிலையில் கரம்பன் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பனைமரம் முறிந்து வீழ்ந்துள்ளது.

எவ்வாறாயினும், பனைமரம் முறிந்து வீழ்ந்ததில் வீட்டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.