பால் மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு! !

பால் மாவின் விலையை மேலும் அதிகரிக்க பால் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இந்த விலை உயர்வைக் கணக்கிடும் வகையில், 400 கிராம் பால் பாக்கெட் ஒன்றின் விலையை 1240 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பால் மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என உள்ளூர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Previous articleகிளிநொச்சியில் கடும் குளிரால் கால்நடைகள் உயிரிழப்பு !
Next articleயாழ். பொதுமக்களுக்கு இலங்கை மின்சாரசபை விடுத்த எச்சரிக்கை !