சிவனொளிபாத மலை யாத்ரீகர்களுக்கு பொலிஸார் விடுத்த விசேட எச்சரிக்கை !

சிவனொளிபாத மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பொலிஸார் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போதைப்பொருளுடன் சிவனொளிபாத மலைக்கு செல்பவர்களை கைது செய்ய விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் பிராந்திய ஊழல் எதிர்ப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பொலிசார் இந்த சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.

போதைப்பொருள் வைத்திருந்த மூவரை ஹட்டன் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

இவர்கள் கஞ்சா மற்றும் சட்டவிரோத புகையிலை பொருட்களை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக 20 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளுடன் ஹட்டன் ஊடாக நுவரெலியா மற்றும் சிவனொளிபாத மலைக்கு விஜயம் செய்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் போதைப்பொருட்கள் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை தடுக்க பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (09.12.2022) ஹட்டன் மோப்ப நாய் பிரிவைச் சேர்ந்த ஸ்டூவர்ட் 1318 என்ற மோப்ப நாயைப் பயன்படுத்தி கிணகாத்தேனை – தியகல பிரதேசத்தில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களில் பிரதம பரிசோதகர் தலைமையில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹட்டன் பிரதேச பிரதான பொலிஸ் அத்தியட்சகர் விஜித த சில்வாவின் வழிகாட்டலின் கீழ் பிரதேச புலனாய்வுப் பிரிவினர்.

இதன்போது கேரள கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்களுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நுவரெலியா சிவனொளிபாத மலைக்கு புனித யாத்திரை மேற்கொள்வதற்காக வந்துள்ளதாகவும் அவர்கள் குருநாகல், கம்பஹா, வரக்காபொல உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.