இலங்கையில் 2022ல் கைதான இந்திய மீனவர்கள்: கடற்படை வெளியிட்ட தகவல்

2022ம் ஆண்டின் இதுவரையான காலம் வரை இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் கீழ் 264 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்திய மீனவர்களுக்கு சொந்தமான 36 படகுகளை தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட படகுகள், சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய தரப்பிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை மேலும் கூறியுள்ளது.

இதேவேளை, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் (டிச.21) கைது செய்யப்பட்டிருந்தனர்.

Previous articleவியட்நாமில் உள்ள இலங்கையர்கள்  தொடர்பில் வெளியான தகவல்
Next articleஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்