தன் வீட்டு நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஜனாதியின் முன்னாள் ஆலோசகர் ! விசாரணை செய்ய கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு !

ஜனாதிபதியின் முன்னாள் பாராளுமன்ற விவகார ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க நாயை
பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் காணொளி தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை அறியுமாறு கோரி பீப்பள்ஸ் டுமோரோ அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (25) முறைப்பாடு செய்துள்ளது.

பீப்பள்ஸ் டுமோரோ அமைப்பின் தலைவர் சட்டத்தரணி அமில எகொடமஹவத்த, சமூக ஆர்வலர் லெசில் டி சில்வா உள்ளிட்டோரும் பொலிஸ் தலைமையகத்திற்குச் சென்றனர்.

அஷு மாரசிங்க இருப்பதாகக் கூறப்படும் காணொளியின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பாரிய குற்றத்தை இழைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் நாளை அமைப்பு பொலிஸ் மா அதிபரிடம் சிலவிடய ங்களை கோரியுள்ளது.

யாருடைய வழிகாட்டுதலின் பேரில் குற்றவாளி மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை? பேராசிரியர் ஆஷு மாரசிங்க தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கை என்ன? எதிர்காலத்தில் இதுபோன்ற துன்புறுத்தல்களைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்?

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு இலங்கை விலங்குகள் நலன் மற்றும் விலங்கு உரிமை செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் விலங்கு நலன் மற்றும் விலங்கு உரிமை ஆர்வலர்களின் சங்கம் இலங்கையின் முக்கிய விலங்கு நல அமைப்பாகும்.

விரைவு விசாரணைகள் மற்றும் நீதி வழங்கப்பட வேண்டுமென அந்த அமைப்பு கோரியுள்ளது.

விசாரணைகளில் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதைத் தடுக்கவும், குறித்த காணொளி உண்மையானது எனில் ஆஷு மாரசிங்கவை கைது செய்து தண்டிக்குமாறு இலங்கை விலங்குகள் நலன் மற்றும் விலங்கு உரிமை செயற்பாட்டாளர்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இந்தச் செயற்பாடு சட்டத்தை மீறும் செயல் எனவும், குறித்த நபர் சிறுவர்கள், விலங்குகள் மற்றும் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அந்த அமைப்பு கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளது.