யாழில் கணவன் கழுத்தில் கத்திவைத்து மனைவியை துஷ்பிரயோகம் செய்த மூவர் கைது !

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் கணவனை கத்தி முனையில் அச்சுறுத்தி மனைவியை வன்புணர்விற்கு உட்படுத்த முயற்சித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாண பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கணவன், மனைவி, குழந்தை மூவரும் வீட்டில் இரவு வேளை உறங்கிக்கொண்டிருந்த போது, ​​வீட்டுக்குள் மூவர் நுழைந்துள்ளனர்.

ஒருவர் வீட்டின் வாசலில் நிற்க மற்றவர் கணவனின் கழுத்தில் வைத்துள்ளார் வைத்துள்ளார்.

இன்னொருவர் மனைவியை வன்புணர்விற்குற்படுத்த முயற்சித்துள்ளார். இருப்பினும் அவர்கள் எழுப்பிய சத்தத்தில் சந்தேக நபர்கள் மூவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

சந்தேக நபர்களை அடையாளப்படுத்தியதைத் தொடர்ந்து பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

இவர்கள் மீது இது போன்ற முறைப்பாடுகள் கடந்த காலங்களிலும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் தெரிவித்துள்ளனர்.

Previous articleஇலங்கையைச் சேர்ந்த 53 பேருடன் மீண்டும் நடுகடலில் தத்தளித்த படகை மீட்டது பிரான்ஸ் கடற்படை!!
Next articleஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா ! ஒருவர் பலி ! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு !