ருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் உட்பட 27 பேர் அதிரடி கைது!

சட்டவிரோதமான முறையில் ருமேனியாவிற்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ருமேனிய எல்லையில் பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு ட்ரக் வண்டிகளில் பதுங்கியிருந்த குடியேற்றவாசிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு லாரியை சோதனையிட்டதில், அதில் 17 எரித்திரியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் இருந்தனர்.

இந்நிலையில், மற்றைய டிரக்கில் 11க்கும் மேற்பட்ட இலங்கையர்களும் பாகிஸ்தானியர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் 21 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Previous articleசுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!
Next articleயாழ். மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கிய சீன அரசு!