யாழ். மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கிய சீன அரசு!

யாழ். குடாவில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு சீன அரசு உதவி வழங்க உள்ளதாக அரசதரப்பிலிருந்து தகவவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்.மாவட்டத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு 1300 சீன அரசாங்கத்தின் உதவிப் பொதிகள் நாளை மாவட்ட செயலகத்தில் விநியோகிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான சீன துணைத் தூதுவர் ஹு வெய் பங்கேற்கவுள்ளார்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை காலை 9 மணிக்கு வழங்கப்படும் இந்த உதவித் திட்டத்தில் யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலாளர்கள் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட தலா 50 குடும்பங்களுக்கு முதலில் 100 குடும்பங்களுக்கு உதவிப் பொதிகள் வழங்கப்படவுள்ளன.

Previous articleருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் உட்பட 27 பேர் அதிரடி கைது!
Next articleஇலங்கையில் வருகின்ற வருடம் ஆடைதொழிற்சாலையில் 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் !