பிரான்சில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் பொலிஸாரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை !

பிரான்சில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பாரிஸின் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாரீஸ் புறநகர் பகுதியான Chene-à-Marne உட்பட பல பகுதிகளில் போலி பொலிஸாரால் மக்கள் ஏமாற்றப்படுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உண்மையான பொலிஸ் உத்தியோகத்தர்களின் சீருடை போன்று தோற்றமளிக்கும் போலி பொலிஸ்காரர்களால் மக்கள் பாரிய அளவில் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முதியவர்களின் வீடுகளை குறித்த போலி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறி வைத்து அடையாளப்படுத்துவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த போலி பொலிஸ் அதிகாரிகள் ஜோடியாக வீடுகளுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அவர்களில் ஒருவர் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக கூறும்போது, ​​மற்றவர் வீட்டிற்குள் எதையோ திருடுவது தெரியவந்துள்ளது.

எனவே இவர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பிரான்ஸ் பொலிஸார் மக்களை கேட்டுக்

Previous articleயாழ்.நகரில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் திறந்துவைக்கப்படவுள்ள கலாச்சார மத்திய நிலையம்!
Next articleகிளிநொச்சியில் நடந்தது அழகிப் போட்டியே இல்லை! கொந்தளித்து வீடியோ மூலம் தனது கோபத்தை வெளிப்படுத்திய யுவதி !