Home நிகழ்வுகள் இலங்கையை வந்தடைந்துள்ள அதிசொகுசு சுற்றுலாப் பயணிகளுடன் கப்பல்

இலங்கையை வந்தடைந்துள்ள அதிசொகுசு சுற்றுலாப் பயணிகளுடன் கப்பல்

அதிசொகுசு கப்பலொன்று இன்று காலை அம்பாந்தோட்டை மாகம்புர சர்வதேச துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.

யூரோப் 2 சுற்றுலா பயணிகள் கப்பல் ஒன்றே சுமார் 650 பயணிகளுடன் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நோக்கில் இன்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ள இந்த கப்பலானது சுமார் மூன்று மாதங்களுக்கும் மேற்பட்ட காலம் உலகின் பல நாடுகளுக்கும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் வருகை தந்த சுற்றுலா பயணிகள் யா எல, உடவலவ, புத்தல, கதிர்காமம், எல்ல உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் செல்லவுள்ளதா தெரிவித்துள்ளனர்.

12345