வாட்ஸ்அப் இயங்காது! வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான உடனடி தகவல் பரிமாறல் செயலியான வட்ஸ்அப் (WhatsApp) எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் Apple மற்றும் Samsung உள்ளிட்டவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில திறன்பேசிகளுக்கான தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளது.

வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் பழைய போன்கள், பழைய இயங்குதளம் கொண்ட போன்கள் என சுமார் 49 போன்களில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியாது எனத் தெரிகிறது.android பதிப்பு 4.1 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகள், iOS 12 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகள் மற்றும் KaiOS 2.5.0 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகளில் தற்போது வட்ஸ்அப் இயங்குகிறது.

எனினும், எதிர்வரும் 31 ஆம் திகதி முதல், android 5.0 (லொலிபொப்) க்கு முன் வெளியான பதிப்புகளில் இயங்கும், android திறன்பேசிகளில் வட்ஸ்அப் நிறுத்தப்படவுள்ளது.

அதேபோல், iOS 10 மற்றும் 11 இல் இயங்கும் ஐபோன்களிலும் வட்ஸ்அப் இயங்காது.

டிசம்பர் 31க்குப் பிறகு வட்ஸ்அப் ஆதரவை பெறாத திறன்பேசிகள் கீழே தரப்பட்டுள்ளன. இவை அடுத்த ஆண்டு முதல் புதிய அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு இணைப்புகள் உட்பட எந்த புதுப்பிப்புகளையும் பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apple iPhone 5
Apple iPhone 5c
Archos 53 Platinum
Grand S Flex ZTE
Grand X Quad V987 ZTE
HTC Desire 500
Huawei Ascend D
Huawei Ascend D1
Huawei Ascend D2
Huawei Ascend G740
Huawei Ascend Mate
Huawei Ascend P1
Quad XL Lenovo A820
LG Enact LG Lucid 2
LG Optimus 4X HD LG
Optimus F3 LG
Optimus F3Q LG
Optimus F5 LG
Optimus F6 LG
Optimus F7 LG
Optimus L2 II LG
Optimus L3 II LG
Optimus L3 II Dual LG
Optimus L4 II LG
Optimus L4 II Dual LG
Optimus L5 LG
Optimus L5 Dual LG
Optimus L5 II LG
Optimus L7 LG
Optimus L7 II LG
Optimus L7 II Dual LG
Optimus Nitro HD Memo ZTE V956
Samsung Galaxy Ace 2
Samsung Galaxy Core
Samsung Galaxy S2
Samsung Galaxy S3 mini
Samsung Galaxy Trend II
Samsung Galaxy Trend Lite
Samsung Galaxy Xcover 2
Sony Xperia Arc S
Sony Xperia miro
Sony Xperia Neo L
Wiko Cink Five
Wiko Darknight ZT