பத்தாயிரம் முதல் இருபதாயிரம் ரூபா வரை இன்று முதல் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு!

பத்தாயிரம் முதல் இருபதாயிரம் ரூபா வரை இன்று முதல் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு!

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நாட்டின் சகல விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட 8 பில்லியன் ரூபா நிதியை விவசாயிகளின் வங்கி கணக்கில் வைப்பிலிடும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்தமுறை பெரும்போகத்தில் 8 இலட்சம் ஹெக்டெயர் நிலப்பரப்பில் நெற்செய்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதில் 7 இலட்சத்து 60 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்பில் தற்போது வரை நெல் பயிரிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையிலான விவசாய குடும்பங்களின் எண்ணிக்கை 1.2 மில்லியனாகும் என்பதுடன், கடந்த பெரும்போகத்தின் அறுவடையில் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய, ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 8 பில்லியன் ரூபா இலங்கைக்கு வழங்கப்பட்டது.

இதன்படி, ஒரு ஹெக்டெயர் நிலப்பரப்பை கொண்ட விவசாயிகளுக்கு 10,000 ரூபாவையும், 2 ஹெக்டெயர் நிலப்பரப்பை கொண்டோருக்கு 20 000 ரூபாவையும் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலிடுமாறு விவசாய அமைச்சர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

இன்றைய தினம் அதற்கான செயற்பாடுகள் விவசாய அமைச்சில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.