Home விளையாட்டு வாட்சனின் சூப்பர் சாதனைகள்!

வாட்சனின் சூப்பர் சாதனைகள்!

watson_acive_002அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று ஒயிட்வாஷ் செய்த நிலையில் பல்வேறு சாதனைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதிய கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்றைய போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அவுஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்தது.

இந்த போட்டியில் 71 பந்துகளில் 124 ஓட்டங்களை குவித்த அவுஸ்திரேலியாவின் அதிரடி வீரர் ஷேன் வாட்சன் கடைசிவரை ஆட்டமிழககாமல் இருந்தார்.

* இதுதான் வாட்சனின் முதல் டி20 சதமாகும், இதுவரையில் மற்ற போட்டிகளில் அதிகபட்சமாக 81 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

* 10 பவுண்டரிகளையும், ஆறு சிக்சர்களையும் விளாசியிருந்தார்

* அணித்தலைவராக வாட்சன் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும், இதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவின் டூபிளசிஸ் 117 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.