யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை தொடர்பில் புதிய தகவல்!

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை கடந்த 12 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்பட்டு இன்று (29-12-2022) வரை 500 பயணிகள் யாழ் விமான நிலையம் ஊடாக பயணித்துள்ளனர்.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 200 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு 300 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் யாழ் விமான நிலையத்தின் ஊடாக பயணிக்க விரும்புவதாகவும், பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.