கனடாவில் புலம்பெயர்ந்தோருக்கு அடித்த மிகபெரும் அதிர்ஷ்டம்!

கனடாவில் இன்னும் 10 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும், திறமையான புலம்பெயர்ந்தோருக்கு இது ஒரு அரிய வாய்ப்பு என்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் அகமது ஹாசன் தெரிவித்தார்.

கனடாவின் நிர்மாணத்துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும், வீடமைப்புக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும், எனவே திறமையான புலம்பெயர்ந்தோருக்கு இது ஒரு அரிய வாய்ப்பு எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் இதுவரை 1 மில்லியன் வேலைகள் நிரப்பப்படவில்லை எனவும், எனவே கனடாவிற்கு புலம்பெயர்ந்தோர், உயர் திறமையான புலம்பெயர்ந்தோர் தேவை எனவும் குறிப்பிட்ட அமைச்சர் ஹசன், நிரப்பப்படாத வேலை வாய்ப்பை நிரப்பி பொருளாதாரத்தை உயர்த்த உதவ வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்.

கனடியர்களுக்கு வீடுகள் தேவை, ஏனெனில் அதிகமான தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள், எனவே தயவுசெய்து வந்து எங்களுக்கு உதவுங்கள், ”என்று அமைச்சர் ஹசன் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, 2025 ஆம் ஆண்டுக்குள், கனடாவிற்கு ஆண்டுதோறும் 500,000 புதிய வருகைகளை மத்திய அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் அறிவித்தார்.

இருப்பினும், பெரும்பாலான கனேடியர்கள் குடியேற்றத்தின் அதிகரிப்பு வீட்டுவசதி பிரச்சினைகள் மற்றும் அரசாங்க சேவைகளை அணுகுவதில் சிரமத்திற்கு வழிவகுக்கும் என்று கவலை தெரிவித்தனர்.

குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு வீடுகள், சுகாதாரம் மற்றும் சமூக சேவைகளுக்கான தேவையை அதிகரிக்கும் என கனடியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.