விடுமுறையில் மருத்துவர் வீட்டில் இருந்தபோது வைத்தியசாலையில் தீவிர கண்கானிப்பில் இருந்த மூவருக்கு ஆபத்தான நிலையை அறிந்த வைத்தியர் வீட்டில் இருந்தவாறு வைத்தியசாலை வருகை !

பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்த மூவருக்கும் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் பாலித ராஜபக்ஷ சிகிச்சை அளித்த விதம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடுமுறையில் மருத்துவர் வீட்டில் இருந்தபோது மூன்று நோயாளிகள் ஆபத்தான நிலையில் காணப்பட்டதால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை அவசரமாக அழைத்தனர்.

தகவலறிந்த மருத்துவர் கண்ணாடியைக் கூட மறந்துவிட்டு வீட்டில் இருந்தபடியே காற்சட்டடையுடன் ஓடியிருப்பது பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

இதன் போது வேறு ஒருவரிடமிருந்து கண்ணாடிகளை வாங்கி நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் மருத்துவப் பணியில் ஈடுபட்டார்.

இதை மருத்துவமனையில் இருந்த சிலர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Previous articleகண்டிக்கு செல்லும் சுற்றுழா பயணிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு ! இதை தவிர்க்குமாறு வேண்டுகொள் !
Next articleபுதைக்கப்பட்டிருந்த பெண்ணின் தலையை வெட்டி எடுத்து சென்ற மர்ம நபர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்