4000 ரூபாவுக்கு மிகாமல் அரச ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவு

2023ஆம் ஆண்டு அரச அதிகாரிகளுக்கு 4000 ரூபாவுக்கு மிகாமல் விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான சுற்றறிக்கையை அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே இன்று அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சிறப்பு முன்பணம் ஜனவரி 1 ஆம் திகதி தொடங்கி பெப்ரவரி 28 ஆம் திகதிக்குள் முடிக்கப்படும்.

இந்த முன்பணம் பெப்ரவரி 28க்கு பிறகு செலுத்தப்படாது.

2023 ஆம் ஆண்டளவில் இந்த கொடுப்பனவு படிப்படியாக நிறுத்தப்பட வேண்டும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous articleமட்டக்களப்பில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் உயிரை மாய்த்த யுவதி ! காதலியின் உடலுக்கு தடுக்க தடுக்க தாலி கட்டிய காதலன் !
Next articleயாழ் மக்களுக்கு சேவையாற்றியது நான் செய்த பாக்கியம்; பிரியாவிடையில் முன்னாள் மாவட்ட செயலர் உருக்கம்!