Home வீடியோ பிரெஞ்சு கடற்கரையில் சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்கும் நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் வீடியோ

பிரெஞ்சு கடற்கரையில் சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்கும் நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் வீடியோ

ship_sink_002பிரெஞ்சு கடற்கரையில் சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்கும் நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
Panama நாட்டிலிருந்து 3,600 டன் மரக்கட்டைகள் மற்றும் மணலினை ஏற்றிக்கொண்டு சென்ற Smit Salvage நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று, பிரான்ஸின் மேற்கு கடற்கரையில் நகர முடியாமல் நின்றுவிட்டது.

இதனைத் தொடர்ந்து அதில் பயணம் செய்த 22 சிப்பந்திகள் ஹெலிகொப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஆனால், 3 நாட்களாகியும் சரக்கு கப்பலினை கரைக்கு கொண்டு வரமுடியவில்லை, ஏனெனில் கடலின் கரையில் இருந்து சுமார் 270 கிலோ மீற்றர் தொலைவில் தத்தளித்த வண்ணம் அக்கப்பல் உள்ளது.

இந்த கப்பலின் உள்ளே தண்ணீர் செல்ல செல்ல இது விரைவில் மூழ்கிவிடும் என சரக்குகப்பலின் தளபதி கூறியுள்ளார், இருப்பினும் இந்த கப்பல் நிற்கும் இடம் கரையில் இருந்து தூரம் என்பதால் இதனை கரைக்குகொண்டு வருவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும் எனக்கூறியுள்ளார்.

இந்நிலையில், சரக்கு கப்பல் கடந்த மூன்று நாட்களாக தத்தளித்து வருவதால், பிரெஞ்சு கடலில் பயணம் செய்யும் பிற கப்பல்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், விரைவில் கப்பலைமீட்கவேண்டும் என பிரெஞ்சு கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.