இன்றைய ராசிபலன் 2/1 /2023

சுபகிருது வருடம் மார்கழி மாதம் 18 ஆம் திகதி திங்கட்கிழமை 2.1.2023. சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 11.28 வரை ஏகாதசி. பின்பு துவாதசி. இன்று மாலை 05.48 மணி வரை பரணி. பின்பு கிருத்திகை. அஸ்தம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
அலுவலகப் பணிகள் மூலம் கவலை உண்டாகும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். கோபமாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. தெய்வ பக்தி அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் அலைச்சலை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் அடைவார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்படும்.

ரிஷபம்
பெண்கள் இக்கட்டான சூழ்நிலையை துணிவுடன் சமாளிப்பார்கள். நண்பர்கள் உறவினரிடம் நல்லுறவு நீடிக்கும். தொழிலுக்குத் தேவையான பணம் வந்து சேரும். மாணவர்கள் மன அழுத்தம் குறைந்து படிப்பார்கள். அரசாங்கம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். போட்டிகள் குறையும்.

மிதுனம்
பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனை நீங்கும். வியாபாரத்தில் லாபம் குறையாது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊக்கமுடன் வேலை செய்வீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு பிள்ளைகள் உறுதுணையாக இருப்பார்கள். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமாகும். அரசியல் துறையினருக்கு புதிய பதவி கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும்.

கடகம்
புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு கிடைக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக முடித்து பாராட்டுப் பெறுவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். வீடு மனைகள் வாங்குவதற்கான தடைகள் அகலும். திறமையாகச் செயல்படுவீர்கள். பாராட்டை அள்ளுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பெண்களுக்கு சுபச் செலவுகள் உண்டாகும்.

சிம்மம்

கார் ஓட்டும்போது கவனம் அவசியம். வியாபாரத்தில் இருப்பவர்கள் விழிப்புடன் செயல்படுங்கள். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் திடீர்ப் பிரச்சினை வெடிக்கும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை வடிவமைப்பீர்கள். உயர்மட்டப் பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். பகையை வென்று தடையைத் தகர்ப்பீர்கள். பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடுவீர்கள்.

கன்னி
சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் நன்மையைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்வு அடைவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சின்னச் சின்ன விஷயங்கள் கூட மனநிறைவைத் தரும். கடல் கடந்து பிரயாணம் மேற்கொள்வீர்கள். சந்திராஷ்டமம் கவனம் தேவை.

துலாம்
புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பயணங்களில் தடை உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கவனம் தேவை. வீண் பழியைச் சுமக்க நேரிடும். வெளியூர் பயணங்களால் உடல் சோர்வு உண்டாகும். முதலாளிகளின் பாராட்டைப் பெற கடுமையாக உழைக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டால் உறவுகள் உடைந்து போகும். வியாபாரம் நிதானமாக நடக்கும்.

விருச்சிகம்
சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டு விலகும். தடை செய்தவர்கள் தாமாகவே விலகி விடுவார்கள். தொழிலை விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள்.வேலைக்கு வெடிவைக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இழுபறியாகும். புதிய நபர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம். எதிர்பாராத செலவு உண்டாகலாம்.

தனுசு
தொழிலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். குடும்பத்தில் திடீர் சச்சரவுகள் தலைதூக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்யும்போது எச்சரிக்கை தேவை. அவசரம் காட்டாதீர்கள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள். வெளியூர் பயணங்களில் பலன் கிடைக்காது. அதிகாரிகள் உங்களை அலட்சியப்படுத்துவார்கள். வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

மகரம்
திறமையை மூலதனமாகக் கொண்டு தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். சிக்கலான பிரச்சினைகளில் தெளிவான முடிவு எடுப்பீர்கள். குடும்பத்தினர் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் நன்மையைத் தரும். அனைத்து தடைகளும் அகன்று தொழில் விரிவடையும். அரசுப் பணியாளர்கள் அதிக லாபம் அடைவார்கள். குடும்பத்தில் மன நிறைவு உண்டாகும்.

கும்பம்
தைரியமாக எதையும் எதிர்கொள்வீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். கையிருப்பு அதிகரிக்கும். சகோதரர் வகையில் உதவி கிடைக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்காலம் குறித்து திட்டம் தீட்டுவீர்கள்.வியாபாரம் நிதானமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மீனம்
எத்தனை இடையூறுகள் வந்தாலும் சமாளிப்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக இருக்கும். பங்குச் சந்தை முதலீடு லாபத்தைக் கொடுக்கும். அரசாங்கம் மூலம் நடக்கும் காரியங்கள் தடைபடாது. முயற்சிகளில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். பணவரத்து மனமகிழ்ச்சியை தரும்.உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் உண்டாகும். தொழில் ரீதியான பயணங்கள் வெற்றியை தரும்.

Previous articleதொலைபேசி காதலனை நம்பி மோசம் போன யாழ் யுவதி; 4 பேரால் கூட்டு வல்லுறவு: தப்பிச் சென்ற காமுகனை விதி விளைாயடிய விதம்!
Next articleஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உயர்தர பரீட்சை: பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை