இன்று 11 புகையிரத பயணங்கள் ரத்து

இலங்கை புகையிரத சேவையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளால் இன்று (02) காலை திட்டமிடப்பட்டிருந்த 11 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.​

இது தொடர்பான பிரச்சினைக்கு இன்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.​

பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக இன்றும் 60க்கும் மேற்பட்ட புகையிரத பயணங்கள் ரத்து செய்யப்படலாம் என முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.​

இதேவேளை, இன்றையதினம் கணிசமான எண்ணிக்கையிலான புகையிரதகள் இரத்துச் செய்யப்படலாம் என புகையிரத பிரதி பொது முகாமையாளர் காமினி சேனவிரத்ன தெரிவித்துள்ளார்

எவ்வாறாயினும், பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை புகையிரத திணைக்களம் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Previous articleமேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறி கடற்கரையில் நீராடச் சென்ற இரு சிறுவர்கள் பலி
Next articleஆயுர்வேத மசாஜ் நிலையமாக இயங்கி வந்த விபாசரா விடுதி – யாழ்ப்பாண பெண் கைது!