யாழ். மாவட்டத்தில் மாத்திரம் போதைக்கு அடிமையான 742 பேர் அடையாளம்: 15 பேர் உயிரிழப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் (2022) போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 742 பேர் மாத்திரமே இனங்காணப்பட்டுள்ளனர்.

இது கடந்த ஆண்டுகளை விட பல மடங்கு அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகளில் 742 பேர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள்.

அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கொடிய ஹெரோயினுக்கு அடிமையானவர்கள். அவர்களில் ஐஸ் மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர்களும் உள்ளனர்.

அத்துடன் இவை மூன்றையு ம் பயன்படுத்துபவர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு போதைப்பொருள் பாவனையாளர்களாக இனங்காணப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மூக்கின் ஊடாகவே அவற்றை உட்கொள்கின்றனர். அடுத்து அதை ஊசி மூலம் உட்கொள்ளப்படுகிறது.

கடந்த ஆண்டு யாழ். மாவட்டத்தில் 15 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.