இன்றைய ராசி பலன்கள் 3/1/2023

சுபகிருது வருடம் மார்கழி மாதம் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 3.1.2023. சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். இன்று முழுவதும் துவாதசி. இன்று மாலை 06.55 மணி வரை கிருத்திகை. பின்பு ரோகிணி.
சித்திரை, சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
நினைத்த காரியம் தடையில்லாமல் நடக்கும் பண வரவு மள மளவென்று அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் உங்கள் கொடி பறக்கும் கனவில் காதலித்த பெண்ணை நனவில் கைபிடிக்கும் நிலை வரும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் அகலும். பெரிய மனிதரின் சந்திப்பால் அரிய காரியங்கள் செய்வீர்கள்.

ரிஷபம்
கண் காது போன்ற உறுப்புகளில் நோய் தொந்தரவு ஏற்பட்டு மருத்துவச் செலவு வரும். வியாபாரத்தில் திடீர் சரிவுகளை சந்திப்பீர்கள். இக்கட்டான சூழ்நிலையில் நண்பர்கள் கை கொடுக்க மாட்டார்கள். பெண்கள் மேல் ஆசைப்பட்டு பிரச்சனைகளை சந்திக்காதீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் தன்மூப்பாக திரிவார்கள். கைப்பொருள் களவு போகும்.

மிதுனம்
அலட்சியமான போக்கால் சிலர் அரசாங்க வேலையை இழப்பார்கள். தூர தேச பயணங்கள் துன்பத்தைக் கொடுக்கும். ஆசையை தூண்டி பெண்கள் காசை பறிக்க நினைப்பார்கள். புதிய தொழில் தொடங்க வேண்டாம். உறவினர்கள் மத்தியில் உங்களுடைய செல்வாக்கு பாதிப்பு அடையும். பிள்ளைகள் பெரிய பிரச்சனையை கொண்டு வருவார்கள். வயிற்றுக் கோளாறால் அவதிப்படுவீர்கள்.

கடகம்
புதிய தொழிலில் அதிக லாபம் பார்ப்பீர்கள். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிரடியாக உயரும். பொருளாதாரத்தை குவிக்க புதுப்புது திட்டங்கள் தீட்டுவீர்கள். தங்க வளையல் வாங்கி கொடுத்து விரும்பிய பெண்ணை மடக்குவீர்கள். உங்களை முடக்கி போட்ட மூட்டு வலி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் தொழில் விருத்தி அடையும்.

சிம்மம்

உங்கள் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் மனைவி மகிழ்ச்சி பூக்களை தூவுவார். வியாபாரத்தில் வெற்றி பெற்று சமுதாயத்தில் உயர்ந்த நிலை அடைவீர்கள். உடலை வருத்தும் சின்ன சின்ன நோய்கள் அகலும். பாரம்பரிய சொத்து கைக்கு வந்து சேரும். காதல் பெண்ணின் கடைக்கண் பார்வையால் கணினி துறையில் உச்சம் தொடுவீர்கள்.

கன்னி
கவனக்குறைவாக இருந்தால் வீட்டில் பணம் களவு போகும். வியாபாரத்தில் புதிய சிக்கல் தோன்றி பொருள் இழப்பு ஏற்படும். கொடுத்த கடனை திருப்பி அடைக்க முடியாமல் மரியாதை குறைவு உண்டாகும். பிள்ளைகளின் பிரச்சனையால் வீட்டில் நிம்மதி குறையும். ஆடம்பரமாக செலவு செய்து அந்தஸ்தை உயர்த்திக் கொள்வீர்கள். கடன் கழுத்தை நெரிக்கும்.துலாம்
வீண் பேச்சுக்களை விலக்கி வையுங்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் மரியாதைக்கு பங்கம் ஏற்படும். கடுமையாக உழைத்தால் தான் கையில் காசு தங்கும். வியாபாரம் மந்தமாக நடக்கும். வெளியூர் பயணங்களில் வீண் செலவு உண்டாகும். வாகனங்களில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு கை காலில் அடிபடலாம். சந்திராஷ்டம நாள். வில்லங்கம் வீடு தேடி வரும்.

விருச்சிகம்
எதிர்பாராத வகையில் பண வரவு உண்டாகும். வியாபாரத்தில் கிடுகிடு லாபம் பார்ப்பீர்கள். ஊரும் உறவும் உங்கள் பேச்சைக் கேட்டு நடக்கும். மரியாதையும் அந்தஸ்தும் அதிரடியாக உயரும். வசீகரமான பேச்சால் இளம் பெண்களின் மனதில் இடம் பிடிப்பீர்கள். காதலில் வெற்றி பெறுவீர்கள்.

தனுசு
தொழில் சிறப்பாக நடக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். சின்ன சின்ன தொல்லைகள் தொந்தரவு கொடுக்கும் எதிரிகளால் உங்களின் புகழுக்கு களங்கம் விளையும். அறிமுகம் இல்லாத பெண்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். கை காசை இழப்பதோடு அவமானம் அடைவீர்கள்.

மகரம்
பஞ்சு மெத்தையில் படுத்தாலும் தூக்கம் வருவது கடினம். புதுப்புது சிக்கல்கள் தோன்றி பொருளாதாரத்தை பாதிக்கும். மற்றவர்கள் மத்தியில் மரியாதை குறையும். காதல் விவகாரங்களில் பின்னடைவு உண்டாகும். பிள்ளைகளால் பெரும் தொல்லைகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சட்டப் பிரச்சனைகள் சங்கடத்தை கொடுக்கும். பழைய கடன்கள் படுத்தி எடுக்கும்.

கும்பம்
பிள்ளைகள் கல்வியில் வெற்றி அடைவார்கள். பெற்றோருக்கு பெருமை சேர்ப்பார்கள். தொழிலில் பெரும் முன்னேற்றம் அடைவீர்கள். உறவினர் மத்தியில் செல்வாக்கை உயர்த்தி கொள்வீர்கள். கையில் கணிசமாக காசு புரளும். பெருவாரியாக செலவு செய்து பெண்கள் மனசை கொள்ளை அடிப்பீர்கள். அரசாங்க ஊழியர்கள் புதிய வீடு கட்டி குடி போவார்கள்

மீனம்
கணவன் மனைவி உறவு கற்கண்டாய் இனிக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். வணிகத்தில் ஈடுபடும் நீங்கள் வலுவான லாபத்தை அடைவீர்கள். கலகலப்பாக பேசி காதலியின் கவலையை போக்குவீர்கள். வெளிநாட்டில் கடுமையாக உழைத்து வீட்டிற்கு பணம் அனுப்புவீர்கள். மனதை வாட்டிய நோய்ப் பயத்திலிருந்து விடுபடுவீர்கள்.