எரிபொருள் விலை குறைப்பு

நேற்று (02) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இரண்டு வகையான எரிபொருட்களின் விலையை குறைக்க இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, சிலோன் ஒயிட் டீசலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் விலையை 10 ரூபாவினால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிலோன் ஒயிட் டீசலின் புதிய விலை 405 ரூபாயாகவும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 355 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Previous articleஇன்றைய ராசி பலன்கள் 3/1/2023
Next articleசாரதி அனுமதிப்பத்திலும் QR குறியீடு