மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய இன்றைய தினம்(02.01.2023) முதல் வெள்ளிக்கிழமை வரை (06.01.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதிகளில் பகலில் ஒரு மணிநேரமும் இரவில் ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.    

Previous articleசாரதி அனுமதிப்பத்திலும் QR குறியீடு
Next articleகல்வி அமைச்சின் கீழ் காணப்படும் வெற்றிடங்கள்: அமைச்சரின் முக்கிய அறிவிப்பு