இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் எடுத்துள்ள விபரீத முடிவு! மகன் பரிதாபமாக பலி

தாயொருவர் தனது மகனையும் மகளையும் விஷம் குடிக்க வைத்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகன் உயிரிழந்துள்ளதாக நால்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ம்பஹா – லொலுவாகொட பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் அருந்திய நிலையில் மூவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் மகன் உயிரிழந்துள்ளார்.

லொலுவாகொட, தலஹேன பிரதேசத்தை சேர்ந்த ஏ.ஏ. பேஷன் சசிந்தா என்ற ஐந்து வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாயார் தற்போது கவலைக்கிடமான நிலையில் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 8 வயதுடைய மகளும் ஆபத்தான நிலையில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் அதிக கடனில் இருந்ததாக விஷம் அருந்திய பெண்ணின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் நால்ல பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous articleயாழில் பிறந்து ஒரு சில நாட்களேயான சிசு ஒன்றின் உடல் நாய்கள் கடித்த நிலையில் மீட்பு!
Next articleயாழில் காதல் தோல்வியால் விபரீத முடிவெடுத்த மாணவி !