Home விளையாட்டு சரவெடி ஆட்டத்தால் கவர்ந்த யுவராஜ் சிங்: கவாஸ்கர் பாராட்டு!

சரவெடி ஆட்டத்தால் கவர்ந்த யுவராஜ் சிங்: கவாஸ்கர் பாராட்டு!

yuvi_gavaskar_002யுவராஜ்சிங் உலகக்கிண்ண டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னால் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில், நீண்ட நாட்களுக்கு பிறகு யுவராஜ் சிங் இடம் பிடித்திருந்தார்.

முதல் இரு போட்டிகளில் யுவராஜ் சிங்குக்கு களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் கடைசி போட்டியில், கடைசி ஓவரில் அதிரடி காட்டி இந்திய அணியின் வெற்றிக்கு யுவராஜ் சிங் வித்திட்டார்.

கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையென்ற நிலையில் ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாச, இந்திய அணி 200 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியை வொயிட் வாஷ் செய்தது. இந்த ஒரே ஓவரில் யுவராஜின் சரவெடி ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதுகுறித்து சுனில் கவாஸ்கர், யுவராஜ்சிங்கின் ஆற்றலில் நம்பிக்கையுள்ளது, யுவராஜ்சிங் தனது ஆற்றலை இழக்கவில்லை. அவர் இந்திய அணிக்கு ஒரு பிளஸ். யுவராஜ்சிங் விடயத்தில் இந்திய அணி பொறுமை காக்க வேண்டியது அவசியம்.

அவுஸ்திரேலிய மண்ணில், யுவராஜ்சிங், தனது பந்து வீச்சால் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

உலகக்கிண்ண டி20 தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதில், யுவராஜ்சிங் பந்து வீச்சு நன்கு எடுபடும். எனவே, 11 பேர் கொண்ட இந்திய அணியில், யுவராஜ்சிங் இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.