தனது இரண்டு பிள்ளைகளுக்கு விஷமூட்டிய தாயும் மரணம்!

தனது இரண்டு பிள்ளைகளுக்கு விஷமூட்டிய தாயும் மரணம்!

லொலுவாகொட பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் அருந்திய நிலையில் வத்துபிட்யால வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாயும் உயிரிழந்துள்ளதாக நால்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாயினால் நஞ்சூட்டப்பட்ட ஐந்து வயது சிறுவன் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

அண்மையில், குறித்த தாய் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் வைத்துக் கொண்டார்.

விஷம் கொடுக்கப்பட்ட மற்றுமொரு எட்டு வயது சிறுமி கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையிலே தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள 8 வயதுடைய மகளும் ஆபத்தான நிலையில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் அதிக கடனில் இருந்ததாக விஷம் அருந்திய பெண்ணின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் நால்ல பொலிஸார் விசேட விசாரணைகளைன் மேற் கொண்டு வருகின்றனர்.

Previous articleகிளிநொச்சியில் பல்வைத்திய சிகிச்சைக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த சம்பவம்..!
Next articleஉள்ளூராட்சி மன்ற தேர்தல் – வேட்புமனு கோரல் திகதி அறிவிப்பு