பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் பங்கேற்க விஜயகாந்த் வியாஸ்காந்துக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்கு இலங்கையின் இளம் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்காக சாட்டோகிராம் சேலஞ்சர்ஸ் நிறுவனத்துடன் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்நிலையில் விஜயகாந்த் வியாஸ்காந்த் தொடரில் பங்கேற்க இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்னும் அனுமதி வழங்கவில்லை என செய்திகள் வெளியாகின.
ஆனால், 2023-ம் ஆண்டுக்கான வங்கதேச பிரீமியர் லீக்கில் விளையாட விஜயகாந்த் வியாஸ்காந்துக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.