இம்மாத இறுதியில் 12 புதிய கேபினட் அமைச்சர்களும், ஆறு ஆளுநர்களும் நியமனம்!

இம்மாத இறுதியில் 12 புதிய கேபினட் அமைச்சர்களும், ஆறு ஆளுநர்களும் நியமனம்!

இம்மாத இறுதிக்குள் 12 புதிய அமைச்சரவை அமைச்சர்களும் 6 ஆளுநர்களும் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்குமெனவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிற்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவிருந்த போதிலும் அது தாமதமானது.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மத்திய மேல் சப்ரகமுவ மற்றும் தெற்கு சப்ரகமுவ, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.