மஹிந்த சம்பந்தன் இடையே முக்கிய சந்திப்பு

வடக்கு – கிழக்கு பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இன்று அவரது இல்லத்துக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச, ஆர்.சம்பந்தனின் இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்ததுடன், தமிழ்த் தேசியம் தொடர்பாகவும் அவருடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரச்சினைகளை முன்வைத்த சம்பந்தன், அவற்றுக்கான தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச, வடக்கு கிழக்கு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் கலந்துரையாடி சுமுக தீர்வை எட்ட முயற்சிப்பதாக சம்பந்தனுக்கு உறுதியளித்தார்.

எதிர்வரும் அனைத்துக் கட்சிகளின் மூன்று நாள் மாநாட்டில் தமது கட்சியான பொதுஜன பெரமுன பங்கேற்கும் என்றும், அதற்கேற்ப முன்மொழிவுகளை ஆராயும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தனிடம் தெரிவித்தார்.

Previous articleஒரே நேரத்தில் தோன்றிய சூரிய குடும்ப கிரகங்கள்
Next articleஇலங்கையில் எகிறும் பழங்களின் விலை