முட்டை விலை குறைவடையுமா! வெளியான அறிவிப்பு

எதிர்வரும் வாரத்தில் முதல் தொகுதி முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அதிகரித்து வரும் முட்டை விலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கடந்த திங்கட்கிழமை கூடிய அமைச்சரவை முட்டை இறக்குமதிக்கு வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்கியது.

எவ்வாறாயினும், முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெருமளவிலான மக்களை பாதிக்கும் என சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில், நேற்று சந்தையில் ஒரு முட்டை, 65 – 70 ரூபாய் வரை வெவ்வேறு விலையில் விற்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில், முட்டையை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு நுகர்வோர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.