இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றி!

மைதானத்தில் நேற்று இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் தசுன் சானக ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 52 ஓட்டங்களையும், அசலங்க 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதன் அடிப்படையில் இலங்கை அணியின் வெற்றிக்கு 207 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.

இந்திய அணி சார்பில் அக்சர் படேல் 65 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தசுன் சானக, கசுன் ராஜித மற்றும் டில்ஷான் மதுசங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அதன் அடிப்படையில் இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

Previous articleஇன்றைய ராசி பலன்கள் 6/1/2023
Next articleயாழில் இரண்டு பெண்கள் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது