பாடசாலையில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தடை !

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளை சோதனை செய்யும் நடவடிக்கையில் பொலிஸாரை ஈடுபடுத்த வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.

களனி – சப்புகஸ்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எந்தவொரு பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளையும் சோதனையிட வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது பாடசாலைகளின் பொறுப்பாகும் எனத் தெரிவித்த அவர், பாடசாலைகளில் போதைப்பொருள் தொடர்பான பரிசோதனைகளை நிர்வாகம், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Previous articleவரலாற்றில் முதல்முறையாக உயர்பதவிக்கு நியமிக்கப்பட்ட தமிழ்ப்பெண்!
Next articleஎரிவாயு விலை தொடர்பில் சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு !