எரிவாயு விலை தொடர்பில் சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு !

சமீபத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டதை அடுத்து, லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,080 என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் 5 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் புதிய விலை ரூ.2,032.

பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள லோஃப் காஸ் சிலிண்டரின் புதிய விலையை அறிய வாடிக்கையாளர் சேவை எண்ணான 1345ஐத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Previous articleபாடசாலையில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தடை !
Next articleசட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் விடுத்த கோரிக்கை!