யாழில் மீட்கப்பட்ட கைக்குண்டு ! தீவிர விசாரணையில் பொலிஸார் !

யாழில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அரியாலை குசவம்பலம் வீதியில் கைக்குண்டு ஒன்று காணப்படுவதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக் கொண்ட பொலிஸார் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினரின் உதவியுடன் செம்மணி பகுதியில் கைக்குண்டை செயலிழக்கச் செய்தனர்.

Previous articleஅரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல் !
Next articleவடகிழக்கு மாகாணங்களில் காணி விடுவிப்பு தொடர்பாக தை பொங்கல் தினத்தில் விசேட அறிவிப்பு!!