வடகிழக்கு மாகாணங்களில் காணி விடுவிப்பு தொடர்பாக தை பொங்கல் தினத்தில் விசேட அறிவிப்பு!!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்வரும் 15ஆம் திகதி தை பொங்கல் தினத்தில் விசேட அறிக்கை வெளியிடப்படவுள்ளது. என ஜனாதிபதி தெரிவித்ததாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டது.

இங்குள்ள அரசியல் கைதிகளின் நீதி விவகாரங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கலந்துரையாடலில் கலந்துகொண்ட நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

Previous articleயாழில் மீட்கப்பட்ட கைக்குண்டு ! தீவிர விசாரணையில் பொலிஸார் !
Next articleயாழ்.மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு !