யாழ். மாணவிக்கு இராணுவத்தினரால் புதிய வீடு பரிசளிப்பு ! எதனால் தெரியுமா !

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணியில் இடம்பிடித்த யாழ்ப்பாணம் சுழிபுரம் – காட்டுப்புலத்தை சேர்ந்த மாணவி ஒருவருக்கு இராணுவத்தினரால் புதிய இல்லம் ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

தியாகி அறக்கட்டளையின் நிதியுதவி மற்றும் ராணுவத்தின் சரீர பங்களிப்பில் கட்டப்பட்ட இந்த வீட்டிற்கு கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில், குறித்த வீடு இன்று யாழ். இதனை மாவட்ட கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் ஸ்வர்ண பொட்டோட்ட திறந்து வைத்தார்.

குறித்த வீடிற்கான காணி பறளை முருகன் ஆலய நிர்வாகத்தினால் 30 வருட ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் ஸ்வர்ண போத்தோட்ட, தியாகி அறக்கட்டளையின் நிறுவனர் வாமதேவ தியாகேந்திரன், யாழ். மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன், 51 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி மேயர் ஜெனரல் வெலகெதர, 513 ஆவது குதிரைப்படை கட்டளை அதிகாரி பிரிகேடியர் ராசிக், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் அதிபர், சங்கானை பிரதேச செயலகம் மற்றும் இராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர்.