அரசாங்க தொழில் வாய்ப்பு – கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித் தேர்வுக்கு இம்மாத இறுதியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. .

கல்வி அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது பாடசாலைகளில் இணைந்துள்ள பட்டதாரிகள் உட்பட அரச சேவையில் உள்ள 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

டிசம்பர் 31ம் தேதி 12,000 ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது 22,000 ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன.

விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் அழகியல் பாடங்களுக்கு ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது. .

Previous article2022 GCE A/L மாணவர்களுக்கான வகுப்புகளுக்கு ஜனவரி 17 முதல் தடை
Next articleயாழ். இளைஞனை பாராட்டி வீடியோ வெளியிட்ட இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின்!