வவுனியா பூவரசங்குளம் பிரதேசத்தில் வன்முறை செயல்களில் ஈடுபட்ட குழுவின் நான்கு பேர் கைது !

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வவுனியா முகாம் அதிகாரிகள் நேற்று சுற்றிவளைப்புச் சோதனையில் ஈடுபட்டு வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்தவர்களை கைது செய்துள்ளனர்.

இந்தப் பகுதியில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட “கெத்து பசங்க” என்ற குழுவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் வாட்ஸ்அப் சமூக வலைதளங்கள் மூலம் வன்முறையில் ஈடுபட்டது தெரிந்தது. இந்தக் குழுவுடன் தொடர்புடைய 18 வயதுடைய நான்கு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பூவரசங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் திகதி பூவரசங்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த வாட்ஸ் அப் குழு தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

Previous articleயாழ். இளைஞனை பாராட்டி வீடியோ வெளியிட்ட இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின்!
Next articleவவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு திடீர் இடமாற்றம் !