வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு திடீர் இடமாற்றம் !

வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக சானக விக்கிரமசிங்க நேற்று (06.01.2023) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

வவுனியா மாவட்ட பிரதான பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய சுபத் கலகமகே, கொழும்பு நாரம்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸ் போக்குவரத்து பிரிவு (வாகன பிரிவு) அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குந்தகசாலையில் அமைந்துள்ள பொலிஸ் பயிற்சிப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த சானக விக்கிரமசிங்க வவுனியா மாவட்ட பிரதான பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நல்ல நேரத்தில் அவர் மத ஆசீர்வாதங்களுடன் தனது கடமைகளை மேற்கொண்டார். இதன் போது, ​​மதகுருமார்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Previous articleவவுனியா பூவரசங்குளம் பிரதேசத்தில் வன்முறை செயல்களில் ஈடுபட்ட குழுவின் நான்கு பேர் கைது !
Next article20 கோடி ட்விட்டர் பயனாளர்களின் விபரங்கள் திருட்டு !