20 கோடி ட்விட்டர் பயனாளர்களின் விபரங்கள் திருட்டு !

20 மில்லியன் ட்விட்டர் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இணைய கண்காணிப்பு நிறுவனமான Hudson Rock தெரிவித்துள்ளது.

இதன் பின்னணியில் உள்ள ஹேக்கர்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை என்றும், இதன் மூலம் பயனாளர்களின் மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் திருடப்பட்டிருக்கலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2021ல் இது நடந்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள ஹட்சன் ராக் நிறுவனம், எலோன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முன் நடந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை நடந்தாலும் இம்முறை அந்த எண்ணிக்கை அதிகம்.