கனடா செல்லும் ஆசை ! போராட்டத்தை கைவிட்ட 38 இலங்கையர்கள் !

சட்டவிரோதமான முறையில் கனடா செல்ல முயன்ற குற்றச்சாட்டின் பேரில், இந்தியாவின் கர்நாடகா மாநிலம் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 38 இலங்கையர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் முகவர்களினால் கனடாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 38 இலங்கையர்கள் கர்நாடகா மாநிலம் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று ஆரம்பமானதையடுத்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தினால் இவர்களது கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதையடுத்து நேற்று இரவு உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் நாடு திரும்ப இந்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleமடடக்களப்பில் பரிதாபமாக பலியான உயர்தர மாணவர் ! வெளியான காரணம் !
Next articleஅம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் களமிறங்குவதற்கு தயாராக இருக்கும் ஆதிவாசிகள் !