இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு

அமெரிக்காவில் 550 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 250 தாதியர்களும், 100 இரசாயன ஆய்வுக்கூட தொழில்நுட்ப வல்லுனர்களும், 200 தாதியர் உதவியாளர்களும் அமெரிக்காவில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

Previous articleஅறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி
Next articleதேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடுகிறது