500,000 பார்வையாளர்களை கடந்த தாமரை கோபுரம்

கொழும்பில் உள்ள தாமரை கோபுரம், பொதுமக்களுக்கு திறக்கப்பட்டதில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை காலை வரை, அரை மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்கள் அதனை பார்வையிட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாத்தறையில் இருந்து வந்த ஒருவருக்கு 500,000 ஆவது அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டதாகவும், அவருக்குப் நினைவுச்சின்னம் மற்றும் பரிசு வழங்கப்பட்டதாகவும் தாமரை கோபுர நிர்வாகத்தின் தலைவர் பிரசாத் சமரசிங்க செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த கோபுரம் கடந்த 2022 செப்டம்பரில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.தாமரை கோபுரம் பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டதில் இருந்து 268 மில்லியன் ரூபாவுக்கும் (730,000 அமெரிக்க டொலர்கள்) அதிக வருமானம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தெற்காசியாவில் மிக உயரமான இந்த தொலைதொடர்பு கோபுரத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கையும் சீனாவும் 2012 இல் கைச்சாத்திட்டன. சீன நிறுவனம் ஒன்று பொது ஒப்பந்ததாரராக உள்ளது.